Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

10 வகுப்பு படிக்கும் போது நடந்த கசப்பான அனுபவம்.. ரொம்பவே கஷ்டப்பட்டேன்!! கேப்ரில்லா பேட்டி..

0 2


விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா.

இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் நடித்துள்ளார்.

தற்போது கேப்ரில்லா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கேப்ரில்லா, தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது, அந்த சமயத்தில் என்னிடம் மொபைல் இல்லை.அதிகம் படிப்பில் கவனம் செலுத்தினேன். அப்போது என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்துவிட்டனர்.

அந்த புகைப்படத்தில் இருந்தது நான் இல்லை. ஒருவேளை நானா இருக்குமோன்னு தோன்றும் அளவிற்கு அந்த புகைப்படம் என்னை போல் இருந்தது. இந்த சம்பவம் என்னை ரொம்ப பாதித்து. 3 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை.. பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள். அந்த சமயங்களில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று கேப்பிரில்ல தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.