D
1992ல் நடிக்க துவங்கி குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை சௌந்தர்யா. ரஜினி, கமல், அமிதாப் பச்சன், விஜயகாந்த், கார்த்தி, சிரஞ்சீவி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகை சௌந்தர்யா 2004ஆம் ஆண்டு Helicopter விபத்தில் மரணமடைந்தார். இவருடைய மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவர் திருமணமாகி கர்ப்பமாக இருந்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மறைந்த நடிகை சௌந்தர்யா, தான் சினிமாவில் கொடிகட்டி மறந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் கிளாமர் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
இதில் “கிளாமர் என்பது அனைத்து ஆர்ட்டிஸ்களுக்கும் முக்கியமான விஷயம். எனது பார்வையில் கிளாமர் என்பது கவர்ச்சியான ஆடை அணிவது அல்ல, நீங்கள் திரையில் அழகாக தெரிவது தான் கிளாமர்” என கூறியுள்ளார்.