Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

முதல் நாள் Pt Sir திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0 1

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் Pt Sir. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவான இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து Pt Sir திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

காஷ்மீரா, அனிகா, தேவதர்ஷினி, தியாகராஜன், இளவரசு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், Pt Sir திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

Leave A Reply

Your email address will not be published.