D
எப்போது முதல் கர்ப்பம், உன் விஷயம் எல்லாம் மர்மமாகவே உள்ளது, கோபத்தில் கொந்தளித்த விஜயா- சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை, விறுவிறுப்பின் உச்சமாக எப்போதும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும்.
கடந்த வார கதைக்களத்தில் சத்யா பிறந்தநாளுக்கு மீனா சென்றதால் கோபத்தில் முத்து சண்டை போட்டு பேசாமல் இருந்தார். பின் வாரத்தின் இறுதியில் முத்து, மீனாவை புரிந்துகொள்ள சண்டையும் முடிந்தது.
ரோஹினி இரண்டாவது கர்ப்பத்திற்காக மருத்துவமனை செல்ல அந்த விஷயம் மீனா காதிற்கு வர அவர் அதிர்ச்சியானார்.
இந்த நிலையில் மீனா இந்த விஷயத்தை ஸ்ருதி காதில் போட அது அப்படியே வீட்டில் இருப்பவர் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.
உடனே விஜயா, ரோஹினியை பார்த்து நீ யாரு, உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, உன் விஷயம் எல்லாம் மர்மமாக உள்ளது.
நான் கேட்கும் கேள்விக்கு எதையும் மறைக்காமல் உண்மை மட்டும் சொல்லனும், நீ முதல் தடவை எப்போது கர்ப்பமான என கோபமாக கேள்வி கேட்கிறார்.
இந்த பரபரப்பான புரொமோ பார்த்த ரசிகர்கள் இந்த முறையும் ரோஹினி ஏதாவது பொய் சொல்லி தப்பிக்க போறாங்க, மீனா மீது பழி வரப்போகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.