D
ஹாலிவுட்டில் பிக் பிரதர் என்ற பெயரில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட்டான ஒரு ஷோ.
அந்த நிகழ்ச்சி பாலிவுட் பக்கம் பிக்பாஸ் என தொடங்கப்பட்டு 15 எபிசோடுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
தமிழ் பக்கம் கடந்த 2017ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கியது.
பல சீசன்கள் ஒளிபரப்பாகி வர 7வது சீசன் கடைசியாக முடிவடைந்தது. இதில் மாயா, பூர்ணிமா, ரவீணா, விசித்ரா, அர்ச்சனா போன்ற போட்டியாளர்கள் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டார்கள்.
இந்த 7வது சீசனின் வெற்றியாளராக வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா பட்டத்தை வென்றார்.
இப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் தான்.
இந்த 8வது சீசனிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என பார்த்தால் அவர் வெளியேறிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுவிட்டார்.
எல்லா சீசன்களிலும் போட்டியாளர்க யார் என்ற பேச்சு போகும், இந்த 8வது சீசனின் தொகுத்து யார் என்ற டாக்கும் ரசிகர்களிடம் அதிகமாகி இருக்கிறது.
இந்நிலையில் 8வது சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் என்று ஒரு லிஸ்ட் வலம் வருகிறது.