D
விஜய்யின் கோட் படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானா?… வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்
கடந்த செப்டம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக வெளியான படம் கோட்.
முதல் நாளிலேயே ரூ. 126 கோடி வசூலை குவித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தில் அடுத்தடுத்த 4 லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாக விஜய்-த்ரிஷா இணைந்து ஆட்டம் போட்ட மட்ட பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
முதல் நாளில் மொத்தமாக ரூ. 126 கோடி வசூலித்த இப்படம் 6 நாட்களில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் கோட் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட் பிரபு சினேகாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், சினேகாவின் கதாபாத்திரம் முதலில் நயன்தாராவிடம் தான் கூறப்பட்டது, ஆனால் அது கொஞ்சம் சரியாக வரவில்லை.
ஆனால் படம் ரிலீஸ் ஆகி படத்தை பார்த்த நயன்தாரா, சினேகா சாய்ஸ் தான் சரி, அவர் அவ்வளவு அழகாக நடித்துள்ளார் என போன் செய்து பாராட்டியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.