D
தமிழில் விஜய் நடிப்பில் 2004 – ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருப்பார்.
விஜய் மற்றும் த்ரிஷாவின் ஜோடி இந்த படத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக ,இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்த சீன்கள் இன்றுவரை வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அந்த அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் சமீபத்தில் ரீ – ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ – ரிலீஸின் போதும் 50 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஓடியது.
மாபெரும் ஹிட் அடித்த இந்த படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலமான நடிகை கிரண் தான் பரிந்துரைக்கப்பட்டாராம்.
ஆனால், அந்த நேரத்தில் அவர் காதலித்து வந்ததால் கில்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டாராம்.
இது தொடர்பாக, நேர்காணல் ஒன்றில் பேசிய கிரண், கில்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது அவர் காதலித்து வந்ததாகவும், அவர் காதலித்த நபர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்றும், இதனால் அந்த வாய்ப்பை தவற விட்டதாகவும் கூறியுள்ளார்.