D
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் நடிகர் விஜய்.
இவரது படத்தை தயாரித்தாலோ, விநியோகம் செய்தாலோ அவர்கள் கண்டிப்பாக லாபம் பெற்றுவிடுவார்கள். அந்த அளவிற்கு மார்க்கெட் உள்ள இவர் தனது 69வது படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்த போகிறார்.
காரணம் அவரது அரசியல் என்ட்ரி தான், அதில் அவர் ஜெயிக்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை.
தற்போது திரையரங்குகளில் விஜய்யின் கோட் படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
தமிழகத்தில் செம வசூல் வேட்டை நடத்திவரும் விஜய்யின் கோட் மொத்தமாக ரூ. 300 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது சென்னையில் மட்டுமே படம் மொத்தமாக ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.