D
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார்.
அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் விஜய்யின் கோட் அவரது கடைசி படத்திற்கு முந்தைய படம்.
எனவே நடிகர் விஜய்யை திரையில் காண கடைசி வாய்ப்பு என அதிக ஆர்வத்துடன் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. இதுவரை அதாவது 6 நாள் முடிவில் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபுதேவா வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரூ. 2 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.