D
தமிழ் சின்னத்திரையில் நிறைய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீவித்யா நஞ்சன்.
நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அக்கா, தங்கை, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார், பிரபலமாகவும் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
வில்லியாக இந்த சீரியலில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.
நடிகை ஸ்ரீவித்யா நஞ்சன் அவருடைய நீண்டநாள் காதலரான அர்ஜுனன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
கர்ப்பமாக இருந்த ஸ்ரீவித்யாவிற்கு அண்மையில் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீவித்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்த தகவலை அவரது கணவர் வெளியிட்டுள்ளார்.