D
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை 5.35க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்று வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.