D
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து இப்போது வேட்டையன் படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முடித்தவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க துபாய் சென்றிருந்தார், தற்போது மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டார்.
சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் ஒரு பழைய புகைப்படம் வைரலாகிறது, அதில் அவருடன் ஒரு சிறுவனும் இருக்கிறார், ஆனால் ரசிகர்களுக்கு அந்த சிறுவன் யார் என்பது தான் தெரியவில்லை.
அவர் வேறுயாரும் இல்லை தமிழ் சினிமாவின் டாப் நாயகனாக வலம் வரும் நடிகர் ஜீவா தான்.