D
Good Bad Ugly படப்பிடிப்பு முடித்த கையோடு தனது பேவரெட் பைக்கை ஓட்டிய அஜித்- வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ
தமிழ் சினிமாவின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் அஜித்.
ரஜினி, விஜய்யை தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ஒரு படம் மாஸ் செய்கிறது என்றால் அது இவருடைய படங்கள் தான்.
துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வந்தார், படத்திற்கான படப்பிடிப்பு அதிகம் அஜர்பைஜானில் நடந்து வந்தது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து சரியான தகவல் இல்லை.
இந்த நிலையில் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.
குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது, ஹைதராபாத்தில் தான் நடந்து வருகிறதாம்.
இந்த நிலையில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது பேவரெட் பைக்கை ஹைதராபாத்தில் ஓட்டியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.