D
70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயசுதா. சமீபகாலாமாக முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகை ஜெயசுதா ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். மூன்று திருமணம் குறித்து வதந்திகள் வெளிவந்த நிலையில், அது உண்மையில்லை என மறுத்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எந்த ஹீரோவின் மீதாவது காதல் வந்ததா என்ற கேள்விக்கு ஜெயசுதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு “நான் ஹீரோயினாக இருந்த காலகட்டத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மீது எனக்கு ஒரு சிறிய ஈர்ப்பு இருந்தது. ஆனால், அது காதலா அல்லது வெறும் ஈர்ப்பு தானா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீது க்ரஷ் இருந்தது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தேன், அது நடக்கவில்லை”. என்றார்.
இதன்பின் அவர் கூறிய விஷயம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது என்னவென்றால் “நான் ஒரு பாடரையும் காதலித்தேன். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கனவு கண்டேன். ஆனால், சில வருடங்களுக்கு பின் தான அவர் ஓரினசேர்க்கையாளர் என தெரிந்து கொண்டேன். பிறகு நான் அதை செய்யக்கூடாது என்று உணர்ந்தேன். எனக்கு இனி எதுவும் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்” என கூறியுள்ளார்.