D
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
பீக்கில் இருந்த போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தவர் பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார்.
அதன்பிறகு படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய வெளியூர் செல்வது, ஆன்மீக பயணம், போட்டோ ஷுட் என தொடர்ந்து செய்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபால் இப்போது கர்ப்பமாக உள்ளார்.
கர்ப்பமான பிறகு நிறைய போட்டோ ஷுட், சீமந்தம், வளைகாப்பு என புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
அமலாபால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் படம் வெளியான நிலையில் அடுத்து லெவல் க்ராஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது. 9 மாதம் கர்ப்பமாக இருப்பவர் தற்போது சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படம் இடம்பெறும் ஒரு பாடலை அமலாபால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பாடியுள்ளார். அந்த பாடல் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.