Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யூடியூபர் டிடிஎப் வாசன் அதிரடியாக கைது.. இதுவரை யாரும் செய்யாத தவறா?

0 1

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையில் சர்ச்சைக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் அவர் சில மாதங்கள் கழித்து ஜாமினில் வெளி வந்தார் என்பதும் இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் செல்போன் பயன்படுத்தியபடி காரை இயக்கியதாக புகார் எழுந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி அவர் கார் ஓட்டியதாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் அளித்த புகாரின் பேரில் டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை அண்ணா நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் செல்போன் பேசியபடி கார் ஓட்டி செல்கின்றனர் என்றும் ஆனால் அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் டிடிஎஃப் வாசன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் நெட்டிசன் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பகிரங்கமாக அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக முதலில் சொல்லி, அதன் பின் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறிய நிலையில், டிடிஎஃப் வாசன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதை பார்க்கும்போது இர்பானுக்கு ஒரு நீதி, டிடிஎஃப் வாசனுக்கு ஒரு நீதியா? என்ற கேள்வியையும் நெட்டிசன் எழுப்பி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.