D
நடிகை ஜான்வி கபூர் Shikhar Pahariya என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை உறுதி செய்யும் விதமாக ஜான்வியும் அவர் கழுத்தில் அவரது பெயர் கொண்ட டாலர் அணிந்து வந்ததும் வைரல் ஆனது.
மேலும் பேட்டிகளில் பேசும்போதும் அவரை பற்றி மறைமுகமாக ஜான்வி பேசி காதலை பற்றி பேசி வருகிறார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்காக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சொகுசு கப்பலில் தற்போது நடைபெற்று வருகிறது.
அதில் ஜான்வி அவரது காதலர் உடன் கலந்துகொண்டு இருக்கிறார். அங்கு ஜான்வி ஷிகர் பஹரியாவுக்கு ஊட்டிவிடும் வீடியோ ஒன்றும் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.