D
நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து அதன் பின் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். அவர் அரசியல் கட்சி தொடங்கி தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கருணாஸ் இன்று சென்னை விமான நிலையம் வந்தபோது அவர் பையை போலீசார் சோதித்த போது ஒரு அதிர்ச்சி கிடைத்து இருக்கிறது.
கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பெட்டிகளில் தலா 20 குண்டுகள் இருந்திருக்கியது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடடினார்கள்.
தான் லைசன்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்திருக்கும் நபர் என்றும், அதில் பயன்படுத்தும் குண்டுகள் தான் அவை என்றும் கருணாஸ் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்து இருக்கிறார்.
அவசரமாக வந்ததால் அந்த குண்டுகள் பையில் இருப்பதை கவனிக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார். இருப்பினும் அதிகாரிகள் கருணாஸை திருச்சி செல்லும் விமானத்தில் ஏற விடாமல் தடுத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.