Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி

0 2

மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendira Modi) நன்றி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்திய வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்களின் உழைப்பை வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.