Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் காட்டுப் பரப்பு: வெளியான புதிய ஆய்வறிக்கை

0 2

இந்தியாவில் காடுகளின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து இருப்பதாக அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.

உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் காடுகளின் பரப்பை அதிகரித்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் காடுகளின் பரப்பை அதிகரித்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இதில் சீனா 19,37,000 ஹெக்டேர் அதிகரிப்புடன் முதலிடத்திலும், ஆவுஸ்திரேலியா 4,46,000 ஹெக்டேர் அதிகரிப்புடன் 2ம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் நிலம் சீரமைத்தல் மற்றும் விவசாய காட்டு வளர்ச்சிக்கான முயற்சிகளை ஐ நா பாராட்டியுள்ளது.

இதற்காக ஒரு புதிய தேசிய கொள்கையை இந்தியா வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை உலக அளவில் காடு அழிப்பு குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் காடுகள் அழிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

மேலும், உலகளாவிய மாங்குரோவ் காடுகளின் அழிவு 2000-2010 மற்றும் 2010-2020 ஆண்டுகளுக்கு இடையே 23% குறைந்துள்ளது.

ஆனால், காலநிலை மாற்றம் காடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காட்டுத்தீயின் தீவிரம் மற்றும் அதிர்வெண் அதிகரித்து வருகிறது. அத்துடன், அமெரிக்காவில் 25 மில்லியன் ஹெக்டேர் காடுகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.