D
லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் விஜய்யுடன் கூட்டணி அமைத்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படத்தை கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் செய்யமுடியாமல் இருந்தது.
2020ஆம் ஆண்டு வெளியாகவிருந்த இப்படம் கடைசியில் 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் கொரோனா காலகட்டத்திலும் வசூலில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக பல இடங்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவில்லை. அதில் ஒரு இடம் தான் UK. USA, CANADA, AUSTRALIA ,UK போன்ற நாடுகளில் மாஸ்டர் படத்தின் வெளியிட்டு உரிமையை Hamsini Entertainment கைப்பற்றி இருந்தது.
மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் UKல் அப்படத்தை வெளியிட முடியாமல் போனதால், தற்போது வெளியிட Hamsini Entertainment நிறுவனம் முடிவு செய்துள்ளனர். ஆம், மாஸ்டர் படத்தை UK-வில் திரையிட போவதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர்.
UK-வில் மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படுவதை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.