D
தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக தொடர்ந்து இளையராஜா பலருக்கும் நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.
ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் வந்த பாடலுக்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் படம் மிகப்பெரிய ஹிட் ஆகி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.